WI vs AUS: புயலால் தனிமைப்படுத்தப்படும் ஆஸி வீரர்கள்!
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான 20 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி சில் தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தனர். அங்கிருந்து அவர்கள் செயிண்ட் லூசியாவில் உள்ள விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செயிண்ட் லூசியாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பமண்டல புயல் வீசும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இப்புயல் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து இரண்டு நாள்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சிகளுக்கு திரும்பப்போவதில்ல என அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜூலை 9ஆம் தேதி செயிண்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது.