பிராவோவின் ரோலை சிறப்பாக செய்து முடிக்க காத்திருக்கிறேன் - துஷார் தேஷ்பாண்டே!
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையே நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 217 ரன்களை எடுத்தது . அந்த அணியின் போக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் 57 ரன்களும் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியின் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 218 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்கம் மிகச் சிறப்பாக அமைந்தது. மேயர்ஸ் அதிரடியாக ஆடி 53 ரண்களில் ஆட்டம் இழந்தாலும் அவர் அமைத்துக் கொடுத்த சிறப்பான துவக்கத்தை முன்னெடுத்துச் செல்ல லக்னோ அணியினர் தவறி விட்டனர் . இதனால் அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணியின் பந்து வீக்கில் மொயினளி சிறப்பாக வந்து வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது. அதிக அளவிலான எக்ஸ்ட்ரா பந்துகளை வீசினர். நேற்றைய போட்டியில் மட்டும் நான்கு நோபால்கள் சிஎஸ்கே அணியினால் வீசப்பட்டுள்ளன . இந்த அனைத்து நோபால்களையும் வீசியது சிஎஸ்கே அணியின் இம்பேக்ட் பிளேயர் துஷார் தேஷ்பாண்டே. சிஎஸ்கே அணியின் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கிய இவர் இரண்டு போட்டிகளிலும் 8 ஓவர்கள் பந்துவீசி 96 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
நேற்றைய போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அதிக அளவிலான வைட் மற்றும் நோபால்களை தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்ததால் கடுப்பான கேப்டன் தோனி பரிசளிப்பு விழாவின் போது இப்படி அதிகப்படியான ஒயிட் மற்றும் நோபல்களை வீசினால் புதிய கேப்டன்களுக்கு கீழே அவர்கள் விளையாடட்டும் நான் என் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தார். மேலும் இது இரண்டாவது வார்னிங் என்றும் கூறினார்.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் பேசிய துஷார் தேஷ்பாண்டே, “நான் தற்காலத்தில் நடப்பவை மீது அதிக நம்பிக்கை கொண்டவன். இதற்கு முன் எது நடந்ததோ அது நடந்தது அதனை மாற்ற முடியாது. அந்த விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தால் அழுத்தமாகி இன்னும் அதிக ரன்களை தான் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அதனால் நான் நடந்தவற்றை மறந்து விட்டேன். சிறப்பாக பந்து வீசியப்படியாவது ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.
இதற்கு முன் இறுதி ஓவர்களில் பிராவோ செய்ததைப் போன்ற ரோல் அணியில் எனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசுவது அவ்வளவு எளிதானதல்ல என்று தெரியும். பிராவோ வின் இடத்தை நிரப்புவதும் லேசான காரியம் அல்ல என்றும் தெரியும் . அவருடைய இடத்தை என்னால் முழுமையாக நிரப்ப முடியாது. ஆனால் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசுவதை பற்றிய சில விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன். பயிற்சியாளர் பிரவோ இடமிருந்து நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அவரைப் போன்ற ரோலை சிறப்பாக செய்து முடிக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.