டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு; நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்து வீரர்!

Updated: Thu, Sep 09 2021 15:56 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தங்கள் டி20 அணியை அறிவித்துள்ளன. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஈயன் மோர்கன் தலைமையிலான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் நான்காண்டுகளுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் இங்கிலாந்து டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் அதிரடி வீரர்கள் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, ஜேசன் ராய் ஆகியோரும் தங்கள் இடத்தை உறுதிசெய்துள்ளன். 

மேலும் கூடுதல் வீரர்களாக ஜேம்ஸ் வின்ஸ், லியம் டௌசன், டாம் கரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்து அணி: ஈயன் மோர்கன், மொயீன் அலி, ஜானி பெயர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், ஆதில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ரிசர்வ் வீரர்கள் : டாம் கர்ரன், லியாம் டாசன், ஜேம்ஸ் வின்ஸ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை