U19 ஆசிய கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!

Updated: Tue, Dec 28 2021 10:10 IST
Image Source: Google

அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அண்டர் 19 அணி, ஆஃப்கானிஸ்தான் அண்டர் 19 அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் சுலைமான் சஃபி, அஹ்மத் அஹ்மதாஸி ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 259  ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஹ்மத் அஹ்மதாஸி 86 ரன்களையும், சுலைமான் சஃபி 73 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஹர்னூர் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 65 ரன்களைச் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான அங்ரிஷ் ரகுவான்ஷி 35 ரன்களைச் சேர்த்தார். 

இறுதியில் ராஜ் பாவா - குஷால் தாம்பே இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்து வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை