ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அண்டர்19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான் மற்றும் ஷாசீப் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கான் 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த ஷாசீப் கான் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஹரூன் அர்ஷத் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய முகமது ரியாசுல்லாஹ் 27 ரன்களிலும், ஃபர்ஹான் யூசுஃப் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்த் சமர்த் நாகராஜ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ஃபஹம் உல் ஹக் 4 ரன்களுக்கும், கேப்டன் சாத் பெய்க் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஷாசீப் கான் 150 ரன்களைக் கடந்து அசத்தினார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாசீப் கான் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 159 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் பாகிஸ்தான் அண்டர்19 அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் சமர்த் நாகராஜ் 3 விக்கெட்டுகளையும், ஆயுஷ் மத்ரே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆயூஷ் மத்ரே - வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆயூஷ் மத்ரே 20 ரன்னிலும், ஆண்ட்ரே சித்தார்த் 15 ரன்னிலும், கேப்டன் முகமது அமன் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த நிகில் குமார் மற்றும் கிரண் சோர்மலே இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகில் குமார் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் கிரண் சோர்மலே ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்வன்ஷ் சிங் 26 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்த கையோடு நிகில் குமாரும் விக்கெட்டை இழக்க இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது. அவரைத்தொடர்ந்து ஹர்திக் ராஜ் மற்றும் சமர்த் நாகராஜ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஏனான் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்து ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அண்டர்19 அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அலி ரஸா 3 விக்கெட்டுகளையும், அப்துல் சுபன், ஃபஹம் உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் ஆண்டர்19 அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அண்டர்19 அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.   

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News