அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் இலங்கை - ஸ்காட்லாந்து அண்டர் 19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு சகுன லியனகேவின் அரைசதம் அடித்து உதவினார். இதனால் மூலம் 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் சகுன லியனகே 85 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஸ்காட்லாந்து அணி தரப்பில் சீன் பிஷ்ஷர் கியோக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து வெற்றி இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேக் ஜார்விஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 

அதன்பின் ஜார்விஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 48.4 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இலங்கை அணி தரப்பில் கேப்டன் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் இலங்கை அண்டர் 19 அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அண்டர் 19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News