மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோங்கடி த்ரிஷா மற்றும் கமலினி இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் கோங்கடி த்ரிஷா ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் கமலினி 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய சனிகா சால்க் ரன்கள் ஏதுமின்றியும், பவிகா 7 ரன்களிலும், மிதில வினோத் 16 ரன்களிலும், ஆயுஷி ஷுக்லா 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த த்ரிஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அண்டர்19 அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் பிரமுதி மெத்சாரா, லிமான்சா திலகரத்னா, அசேனி தலகுனே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அண்டர்19 அணி வீராங்கனைகள் ஆரம்பம் முதலே இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ரஷ்மிகா 15 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஷப்னம் ஷகில், ஜோஷிதா, பருணிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய யு19 மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை யு19 மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News