ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
UAE Squad Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருகான ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக முகமது வசீம் தொடர்வார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10-ம் தேதி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. மேலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் 17 பேர் அடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக முகமது வசீம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேலும் இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் மதியுல்லா கான், இடது கை சுழற்பந்து வீச்சாளர் சிம்ரஞ்சித் சிங் ஆகியோர் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 32 வயதான மதியுல்லா தனது நாட்டிற்காக 1 ஒருநாள் போட்டியில் 1 விக்கெட்டையும், 5 டி20 போட்டிகளில் 4 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம், 35 வயதான சிம்ரன்ஜித் பற்றிப் பேசினால், அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும், 11 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த இரண்டு வீரர்களும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானுடனான முத்தரப்பு தொடருக்கான யுஏஇ அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
Also Read: LIVE Cricket Score
ஆசிய கோப்பை தொடருக்கான யுஏஇ அணி: முஹம்மது வாசிம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கௌசிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.