சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய யுஏஇ வீரர்களுக்கு 8 ஆண்டுகள் தடை!
கடந்தாண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈட்டுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து ஐசிசி யின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டு வந்தது.
அதன்படி ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அமிர் ஹயாத், அஷ்ஃபக் அகமது ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட வீரர்கள் மீது ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகள் எண் பிரிவு 2.1.3, பிரிவு 2.4.2, பிரிவு 2.4.3, பிரிவு 2.4.4, பிரிவு 2.4.5 ஆகியவற்றின் கீழ் இந்த தடை நடவடிக்கையானது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் உள்பட மூன்று வீரர்களை ஐசிசி தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.