‘முதல் ஸ்டாப் மும்பை’ பிசிசிஐ வெளியிட்ட ட்வீட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி, இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது.
அதேசமயம் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதையடுத்து ஆடவர், மகளிர் இரு அணிகளையும் ஒன்றாக ஒரே விமானத்தில் இங்கிலாந்து அழைத்துச் செல்ல பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர் வீரங்கனைகளும் மும்பை வந்தடைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியா ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ், முகமது சிராஜ், மயாங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஒரே விமானத்தில் இன்று மும்பை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அனைவரும் பிசிசிஐ ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.