புதிய சாதனை நிகழ்த்திய உம்ரான் மாலிக்; வியந்து நின்ற டிராவிட்!

Updated: Wed, Jun 08 2022 22:05 IST
Image Source: Twitter

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசி தனது அபாரமான திறமை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் நிச்சயம் அவருக்கு அறிமுகம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் பயிற்சியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி இந்திய அணி கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசி ராகுல் டிராவிடின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதோடு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்த அவர் தற்போது இந்திய அணியில் நடைபெற்று வரும் பயிற்சியின்போது 163. 7 என்கிற வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை உலக அளவில் அதிவேகமாக வீசப்பட்ட பந்தாக அக்தரின்(161.3) பந்தே இருக்கும் வேளையில் தற்போது அவரை விட கூடுதல் வேகத்தில் உம்ரான் மாலிக் வீசியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அத்தோடு வலைப்பயிற்சியில் அவர் வீசிய அந்த அதிவேக பந்துவீச்சு குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. மேலும் இதன் காரணமாக அவருக்கு கின்னஸ் சாதனையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் அவர் வீசியுள்ள இந்த உலகின் அதிவேக பந்துவீச்சு பயிற்சியின் போதே வந்துள்ளதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் அவர் களம் இறங்கி இதே வேகத்தில் பந்து வீசும் பட்சத்தில் உலகின் அதிவேக பந்து வீச்சாளர் என்கிற கின்னஸ் சாதனையை அவர் படைப்பார் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக இப்படி அசுர வேகத்தில் பந்து வீசி வரும் இவரை நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இணைத்து விளையாட வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை