ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக் விலகல்; சேத்தன் சகாரியாவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி அந்த அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் உம்ரான் மாலிக்கை அவரது அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. முன்னதாக அவர் 2021ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வந்தார்.
தனது அதிவேகப்பந்துவீச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உம்ரான் மாலிக் இதுவரை ஐபிஎல் தொடரில் 26 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து அவர் மணிக்கு 150+ கிமீ வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்டர்களை நிலைகுழைய செய்ததன் காரணமாக இந்திய அணிக்கு அறிமுகமாகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதன்படி அவர் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடினார்.
இதில் இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதன்பின் காயம் காரணமாக இந்தீய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட உம்ரான் மாலிக், இந்த ஐபிஎல் தொடரின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் காயம் காரணமாக அவர் இத்தொடரில் இருந்தும் விலகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தொடரில் இருந்து விலகிய உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரிவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 19 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளிலும் சகாரியா விளையாடிவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் (துணைக்கேப்டன்),ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பிர்மன் பாண்டே பவல், ஸ்பிர்மன் பான்டே பவல் , அனுகுல் ராய், மொயின் அலி, சேத்தன் சகாரியா.*