இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் தனது மிகச்சிறந்த திறமைகளால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கடந்த 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் சமீப காலங்களில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள இவர் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு பின் அவரைப்போலவே அதிரடியாக விளையாடும் நல்ல விக்கெட் கீப்பர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார். 

Advertisement

அந்த வகையில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள இவர் வருங்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக போற்றப்படுகிறார். இதுபோல் நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் வீரர்கள் நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் பேசப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ரிஷப் பந்த் தீவிர ரசிகர் என்றும் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கடந்த சில வருடங்களாகவே அரசல் புரசலாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதிலும் 2018இல் இந்த இருவரும் டேட்டிங் செய்வதாகவும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

Advertisement

இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய ஊர்வசி ரவுத்தேலா, நான் வாரணாசியில் ஷூட்டிங்கில் இருந்தேன். அங்கிருந்து ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு சென்றேன். 10 மணி நேரம் தொடர்ச்சியான ஷூட்டிங்கிற்கு பிறகு ரூமுக்கு திரும்பினேன். அங்கு என்னை பார்க்க வந்த ரிஷப் பந்த் எனக்காக நீண்டநேரம் லாபியில் காத்துக்கொண்டிருந்தார். நான் மிகுந்த சோர்வாக இருந்தேன். அதனால் எனது ஃபோனை கவனிக்கவில்லை. எனது ஃபோனுக்கு நிறைய மிஸ்டு கால்கள் வந்திருந்தன. 

நான் தூங்கி எழுந்தபோது 16-17 மிஸ்டு கால்கள் இருந்தன. எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. பொதுவாக பெண்களுக்கு காக்கவைப்பது பிடிக்கும். அதன்பின்னர் அவரை தொடர்புகொண்டு, மும்பைக்கு வரும்போது சந்திப்போம் என்று கூறிவிட்டேன் என்றார் ரவுத்தேலா.

இது ரிஷப் பந்த் பார்வைக்கும் சென்றதால் அதிருப்தியடைந்த அவர் சிலர் இதுபோல விளம்பரத்திற்காக பேசுவது வேடிக்கையாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசியின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார். இது குறித்து அவர், “தலைப்புச் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்ற விளம்பரத்துக்காக சிலர் இப்படி பேட்டி கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. சிலர் பெயருக்காகவும் புகழுக்காகவும் இப்படி செயல்படுவது மிகவும் கவலைக்குரியதாகும். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியதுடன் ஆளை விடுங்கள் சிஸ்டர், உங்களின் பொய்க்கும் எல்லைகள் உள்ளது என்று ஹாஷ்டேக் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதால் சில மணி நேரங்களுக்கு பின் அவர் அதை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் அவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். அந்த நிலைமையில் அதைப் பார்த்த ஊர்வசி நேற்றைய ரக்ஷா பந்தன் தினத்தில் அவரை தம்பி என்று அழைத்ததுடன் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Advertisement

இதுபற்றி அவர் தனது ட்விட்டரில்,“சின்ன தம்பி பேட் மற்றும் பந்துகளில் மட்டும் விளையாட வேண்டும். நான் இளம் குழந்தையான உங்களை வைத்து தேவையற்ற புகழ் பெற விரும்பும் இளம் பெண் அல்ல டார்லிங்” என்று கூறியதுடன் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள், ஆர்பி சின்னத்தம்பி, அமைதியான பெண்ணிடம் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இப்பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News