அதிவேக இரட்டை சதம் விளாசி சமீர் ரிஸ்வி சாதனை; வைரலாகும் காணொளி!

Updated: Sat, Dec 21 2024 23:15 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் அண்டர்23 மாநில கோப்பை தொடருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் உத்தர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். 

இப்போட்டியில் உத்திர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் என தனது இரட்டை சத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேலும் அவர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்ய இந்த இன்னிங்ஸில் வெறும் 97 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 405 ரன்களை குவித்ததுடன் 152 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றும் அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் சமீர் ரிஸ்வி 97 பந்துகளில் இரட்டை சதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார். முன்னதாக நியூசிலாந்து வீரர் சாத் பௌஸ் முதல்தர கிரிக்கெட்டில் 103 பந்துகளில் இரட்டை சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது சமீர் ரிஸ்வி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுதவிர்த்த இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் அதிவேக இரட்டை சதமடித்த வீரர் எனும் தமிழ்நாடு அணியை சேர்ந்த ஜெகதீசனின் சாதனையையும் சமீர் ரிஸ்வி முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் 114 பந்துகளில் தமிழ்நாடு வீரர் ஜெகதீசன் இரட்டை சதமடித்து அசத்தியதே சாதனையாக இருந்த் நிலையில், தற்போது சமீர் ரிஸ்வி அதனை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 இந்நிலையில் இப்போட்டியில் சமீர் ரிஸ்வி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி இரட்டை சதத்தைப் பதிவுசெய்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கடந்தாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அத்தொடரில் அவர் 8 போட்டிகளில் 51 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் சிஎஸ்கே நிர்வாகம் அவரை அணியில் இருந்து வெளியேற்றியது. இதையடுத்து நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.95 லட்சத்திற்கு சமீர் ரிஸ்வியை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி வருவதுடன், அடுத்தடுத்து சதங்களை விளாசி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை