ZIM vs IND: இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி!

Updated: Mon, Jun 24 2024 21:40 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதீஷ் ரெட்டி, துஷார் தேஷ் பாண்டே மற்றும் துருவ் ஜூரெல் போன்ற அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, அந்த அணி கோப்பையை வெல்வதற்கு மிக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்திக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தாம் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த தந்து விரக்தியை வருண் சக்ரவர்த்தி தனது சமூக வலைதள பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 

அதன்படி, வருன் சக்ரவர்த்தி தனது சமூக வலைதள பதிவில், "நான் பணம் செலுத்தி தனக்கென ஒரு பிஆர்(PR) ஏஜென்சியை வைத்திருக்க விரும்புகிறேன்” என்று பதிவுசெய்துள்ளார். ஏனெனில் சமீப காலங்களில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வைப் பொறுத்தவரையில் மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிகபடியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாகவும், தென் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை என்றும் கருத்துகள் நிலவி வருகிறது. 

 

உதாரணமாக ஐபிஎல் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாதது, கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் அணியில் இருந்தாலும் அவருக்கான வாய்ப்பினை வழங்காதது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது வருண் சக்ரவர்த்தியின் பதிவானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை