இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து தமிழ்நாடு சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இந்திய அணியில் வீரர்களுக்கு நடத்தப்படும் உடற்தகுதி பரிசோதனை, யோயோ டெஸ்ட் ஆகியவற்றில் வருண் சக்ரவரத்தி தோல்வி அடைந்ததால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் 'லெக் ஸ்பின்னர்' ராகுல் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாகப் பந்துவீசியதை அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தோள்பட்டை காயம் காரணமாக அவரால் அத்தொடரில் பங்கேற்க முடியவில்லை. 

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் வீரர்கள் தகுதித்தேர்வான யோ யோ சோதனை நடைபெற்றது. இத்தேர்வில் வருண் சக்ரவர்த்தில் குறிப்பிட்ட நேரத்தில் 2 கிலோ மீட்டர் இலக்கை எட்டவில்லை. அதேசமயம் அவருக்கு அளிக்கப்பட்ட மறுவாய்ப்பிலும் அவரால் இலக்கை எட்டமிடியவில்லை.

இதனையடுத்து, இந்திய அணியில் வலைபயிற்சி பந்துவீச்சாளரகாக இடம் பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வருண் சக்கரவர்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பைத் தவறவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News