இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை டிராவிட் எடுத்தது மிகவும் ஆச்சரியம்: ரிக்கி பாண்டிங்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், கடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நடப்பு இந்திய - நியூசிலாந்து தொடரிலிருந்து ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் எடுத்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பாண்டிங், “டிராவிட் இந்த வேலையை எடுத்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவருக்கு இளம் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே அவர் இதை எடுத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
Also Read: T20 World Cup 2021
ஆனால் நான் சொன்னது போல் நான் பேசிய நபர்கள் தங்களுக்கு சரியான நபர் கிடைத்துள்ளார்கள் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் அவர்களால் டிராவிட்டை இந்த பதவியில் நியமன் செய்ய முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.