நியூசிலாந்துக்கும் மற்றும் ஒரு அடி; ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் மார்டின் கப்தில்!

Updated: Wed, Nov 23 2022 16:23 IST
Veteran New Zealand Batter Martin Guptill Released From Central Contract (Image Source: Google)

டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தும் அளிப்பது குறைந்து வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பிரபல வீரர்களான டிரெண்ட் போல்ட், கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம் ஆகிய மூவரும் ஒப்பந்தத்தில் இருந்து விலகி டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வந்துள்ளார்கள். 

கிராண்ட்ஹோம் இதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பெற்றார். 

எனினும் ஃபின் ஆலனுக்கு நியூசிலாந்து அணி முக்கியத்துவம் அளித்தது. இதையடுத்து டி20 லீக் உள்ளிட்ட வேறு வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து கப்தில் விலகியுள்ளார். எனினும் நியூசிலாந்து அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 3ஆவது நியூசிலாந்து வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் போன்ற பெருமைகளை மார்டின் கப்தில் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை