இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் 38 அணிகளிடன் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும், ஜெய்தேவ் உனாத்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.

Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் பவன் ஷா 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த பச்சவ் 27, அங்கித் பாவ்னே 16, அஸிம் காஸி 37 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியிலும் சதமடித்து அசத்தினார். 

இதன்மூலம் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தனது 8ஆவது சதத்தையும் அவர் பதிவு செய்து சாதனைப்படைத்துள்ளார். அதன்பின் 108 ரன்கள் எடுத்த நிலையில் ருதுராஜும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது. சௌராஷ்டிரா அணி தரப்பில் சிராக் கானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். 

Advertisement

அவருக்கு துணையாக விளையாடிய சிராக் ஜானி 30 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 46.3 ஓவர் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதுடன், விஜய் ஹசாரே கோப்பையை 2ஆவது முறையாக தட்டிச் சென்றது.

இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஷெல்டன் ஜாக்சன் ஆட்டநாயகனாகவும், நடப்பு சீசனில் 8 சதங்களை விளாசிய மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News