விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ஜம்மூ-காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் துஷார் ரஹேஜா 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து ஜெகதீசனுடன் இணைந்த பாபா இந்திரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் தனது சதத்தையும், அவருடன் இணைந்து விளையாடி வந்த இந்திரஜித் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 170 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 78 ரன்களைச் சேர்த்த நிலையில் இந்திரஜித் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஜய் சங்கரும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய வந்த ஜெகதீசன் 17 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 165 ரன்களைக் குவித்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் முகமது அலி 37 ரன்களையும், கேப்டன் ஷாய் கிஷோர் 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு பினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்களைக் குவித்தது. ஜம்மு அணி தரப்பில் யுத்விர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜம்மு-காஷ்மீர் அணிக்கு ஷுபம் கஜூரியா-கம்ரான் இக்பால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இக்பால் 11 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய விவ்ரந்த் சர்மா, கேப்டன் பரஸ் தோக்ரா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய அப்துல் சமத் அதிரடியாக விளையாடி 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாஹில் லொட்ரா, ஷிவான்ஷ் சர்மா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுபம் கஜூரியாவும் 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஜம்மு அணி 36.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 162 ரன்களில் ஆல் அவுட்டானது. தமிழ்நாடு தரப்பில் சி.வி.அச்யுத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News