டி20 உலகக்கோப்பை: விடியோ காலில் விராட், ரிஷப் - வைரல் காணொளி!
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர், கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-இல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களுக்கான விளம்பரமாக விராட் கோலி - ரிஷப் பந்த் இடையேயான வேடிக்கையான உரையாடல் கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.
அதில், விடியோ கால் மூலமாக ரிஷப் பந்திடம் விராட் கோலி பேசுகிறார். “ரிஷப், டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் தான் வெற்றியைத் தரும் - கோலி
கவலை வேண்டாம். தினமும் நான் பயிற்சி எடுக்கிறேன். ஒரு விக்கெட் கீப்பர் தான் உலகக் கோப்பையில் சிக்ஸர் அடித்து இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார் - ரிஷப் பந்த்
ஆமாம். ஆனால் தோனிக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. - கோலி
நான் தான் இந்தியாவின் விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
அணியில் ஏராளமான விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள். பயிற்சி ஆட்டங்களில் யார் விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம் - கோலி” என்று அக்காணொளி முடிகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்திய அணி அக்டோபர் 18 அன்று இங்கிலாந்தையும் அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் பயிற்சி ஆட்டங்களில் எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இரு ஆட்டங்களும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.