லிஃப்டில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித்; ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Updated: Thu, Dec 30 2021 22:01 IST
VIDEO: Steve Smith Gets Stuck In Hotel Lift For An Hour (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியைப் பெற்று தொடரை வென்றுள்ளது. 

அதிலும் குறிப்பாக மெல்போர்னில் நடைபெற்ற ஆஷஸ் 3ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் மெல்போர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிக்கிக்கொண்டுள்ளார். லிஃப்டில் அவர் சுமார் 55 நிமிடங்கள் சிக்கிக்கொண்டுள்ளார். 

மேலும் லிஃப்டின் கதவைத் திறக்க சக வீரர் மார்னஸ் லபுஷாக்னேவும் மறுமுனையிலிருந்து முயற்சித்ததாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்மித் கூறுகிறார்.

 

Click here to watch Video of Steve Smith

மேலும், மீட்புப் பணிகளுக்கு மத்தியில் ஸ்மித்துக்கு லபுசாக்னே சாக்லெட் கொடுக்கும் காட்சிகளும் அந்த ஸ்டோரியில் பதிவாகியுள்ளன.

இறுதியாக பெரும் முயற்சிக்குப் பிறகு ஸ்மித் லிஃப்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஹோட்டல் அறைக்குச் சென்ற பிறகு, அந்தத் தகவலைப் பதிவிடுவதற்காகவும் ஒரு ஸ்டோரியை ஸ்மித் இணைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை