விஜய் ஹசாரே கோப்பை: காலிறுதிக்கு முன்னேறின உ.பி., விதர்பா!

Updated: Sun, Dec 19 2021 18:44 IST
Vijay Hazare Cup: UP, Vidarbha advance to quarterfinals ! (Image Source: Google)

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் உத்திர பிரதேசம் - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. 

இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சுபம் சர்மா 83 ரன்களைச் சேர்த்தார். உபி அணி தரப்பில் யாஷ் டியால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து களமிறங்கிய உத்திர பிரதேச அணி முதலில் தடுமாறினாலும், அக்‌ஷ்தீப் நத் - ரிங்கு சிங் ஆகியோரது  அரைசதத்தினால் 49ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. 

இதன்மூலம் உத்திர பிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்றது. 

இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் விதர்பா - திரிபுரா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 258 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் இலக்கை துரத்திய விதர்பா அணி எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 224 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் விதர்பா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை