இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா - கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில் யாஷ் நாகர், அங்கித் பாவ்னே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கெய்க்வாட் - ராகுல் திரிபாதி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். 

மேலும் இத்தொடரில் ஹாட்ரிக் சதமாகவும் இது அமைந்தது. முன்னதாக மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய அணிகளுக்கு எதிராக ருதுராஜ் சதம் விளாசி அசத்தியிருந்தார். 

அதன்பின் 124 ரன்கள் எடுத்திருந்த கெய்க்வாட் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட் ராகுல் திரிபாதி 99 ரன்களில் ஆட்டமிழந்து நூழிலையில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைக் குவித்தது. கேரள அணி தரப்பில் நித்தீஷ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News