விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய சண்டிகர் அணிக்கு கேப்டம் மனன் வோரா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.     139 பந்துகளை எதிர்கொண்ட வோரா 2 சிக்சர், 13 பவுண்டரிகள் என 141 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

அவருக்கு துணையாக அர்ஸ்லன் கான் 87 ரன்களையும், அங்கித் கௌஷிக் 56 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த கெய்க்வாட் சதமடித்ததுடன், 132 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 168 ரன்களைச் சேர்த்தார். இந்த தொடரில் ருதுராக் கெய்க்வாட் விளாசும் 4ஆவது சதம் இதுவாகும். 

இறுதியில் அஸிம் காஸி அதிரடியாக விளையாடி 73 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் மத்திய பிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News