விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு!

Updated: Thu, Dec 09 2021 15:42 IST
Vijay Hazare Trophy: Tamil Nadu beat Karnataka by 8 wickets (Image Source: Google)

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் இரண்டாம் சுற்று லீக் ஆட்டத்தில் இன்று தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 36.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், சாய்கிஷோர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணியில் சாய் சுதர்சன் 18 ரன்னிலும், கேப்டன் ஜெகதீசன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - வாஷிங்டன் சுந்தர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் இந்திரஜித் அரைசதம் கடந்தார்.

இதன்மூலம் தமிழ்நாடு அணி 28 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தியது. மேலும் இத்தொடரில் தமிழ்நாடு அணி தனது இரண்டாவது வெற்றியையும் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை