விஜய் ஹசாரே: கர்நாடகாவை 122 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!

Updated: Thu, Dec 09 2021 12:56 IST
Vijay Hazare Trophy: Tamil Nadu bowled out Karnataka by 122 (Image Source: Google)

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ரவிக்குமர் சமர்த் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹன் கதம் - கேப்டன் மனீஷ் பாண்டே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பி ரோஹன் 37 ரன்னிலும், மனீஷ் பாண்டே 40 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். 

இதன்மூலம் 36.3 ஓவர்களிலேயே கர்நாடக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை