விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் மூன்றாவது சுற்றில் மகாராஷ்டிரா - கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசியது.
Advertisement
அதன்படி களமிறங்கிய மகாராஷ்டிரா அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ராகுல் திரிபாதி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்களைக் குவித்தது.
இதில் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து அசத்தினார். இது அவர் இத்தொடரில் அடிக்கும் மூன்றாவது சதமாகும்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய கேரள அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் விஷ்ணு வினோத் - சிஜொமன் ஜோசப் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இதில் விஷ்ணு வினோத் சதமடித்தார். இதன்மூலம் கேரள அணி 48.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மகாராஷ்டிரா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.