‘சரியானவர்கள் சரியான இடத்திற்கு செல்வார்கள்’  - ஹர்திக் பாண்டியா!

Updated: Sat, Apr 29 2023 22:17 IST
Vijay Shankar Is More Fitter, Confident: GT Skipper Hardik Pandya (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39ஆஆவது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டிகள் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரர் குர்பாஸ் 81 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நாங்கள் ரன்களை விட்டுக் கொண்டிருந்த பொழுது நூர் மற்றும் லிட்டில் இருவரும் எங்களை ஆட்டத்தில் மீண்டும் கொண்டு வந்தார்கள். குர்பாஸ் நம்பிக்கையுடனும் தெளிவுடனும் பந்துகளை அடித்து விளையாடினார். அப்போது நூர் மற்றும் லிட்டில் இருவரும் பந்து வீசியது கிரேட்.

இந்த விக்கெட்டில் எந்த நாளாக இருந்தாலும் நான் 180 ரன்களை எடுத்துக் கொள்வேன். ஒரு அணியாக சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் சூழ்நிலைக்கு மதிப்பளித்து விளையாடுகிறார்கள். நாங்கள் அதை எதிர்கொள்ள விரும்புகிறோம். அது நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது மற்றும் புத்திசாலித்தனமாக இருப்பது.

விஜய் சங்கர் பிட்டாக இருக்கிறார். அதிக தன்னம்பிக்கை உடன் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய வெற்றிகள் போட்டியை மாற்றுகிறது. சரியானவர்கள் சரியான இடத்திற்கு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். சரியானவர்களில் நிச்சயமாக விஜய் சங்கரும் ஒருவர்” என்று பாராட்டியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை