அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் சங்கர் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது கௌகாத்தியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிதீஷ் ரானா தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 19 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய விஜய் சங்கர் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை ஜடேஜா வீசிய நிலையில் ஓவரின் முதல் பந்திலேயே வநிந்து ஹசரங்கா சிக்சர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார்.
ஆனால் ஷாட்டை அவரால் சரியாக அடிக்க முடியாத காரணத்தால், பந்து காற்றில் இருந்தது. அப்போது பவுண்டரில் எல்லையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விஜய் சங்கர் ஓடிவந்து முன்னோக்கி டைவ் அடித்ததுடன் ஒரு அற்புதமான கேட்ச்சையும் பிடித்து அசத்தினார். இந்த கேட்சை கண்ட ஹசரங்கா ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்ததுடன், பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் விஜய் சங்கர் பிடித்த இந்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக்(கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே.
இம்பேக்ட் வீரர்கள் - குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, யுத்வீர் சிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திர, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி , ஆர். அஸ்வின், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, கலீல் அகமது மற்றும் மதிஷா பதிரானா.
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள்: ஷிவம் துபே, முகேஷ் சவுத்ரி, டெவன் கான்வே, ஷேக் ரஷீத், சாம் கரன்.