ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த விராட் கோலி!

Updated: Sat, May 03 2025 20:55 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக்கப் பெத்தல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்திய நிலையில் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து விராட் கோலியும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்திய நிலையில், 62 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தனார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் விராட் கோலி 53 ரன்களை கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 8500 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 8500 ரன்களை பூர்த்தி செய்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 263 போட்டிகளில் 255 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 8509 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து இப்போட்டியில் விராட் கோலி சிக்ஸர் அடித்ததன் மூலம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தனது 150ஆவது சிக்ஸரையும் பூர்த்தி செய்து அசத்தினார். 

இதுதவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 500 ரன்களைக் கடந்ததன் மூல்ம் இபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 500+ ரன்களை அடித்த வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் 7 சீசன்களில் 500+ ரன்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது விராட் கோலி 8 சீசன்களில் 500+ ரன்களை அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

இதுதவிர்த்து இப்போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஆர்சிபி அணிக்காக 300 டி20 சிக்ஸகளை அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி படைத்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் ஆர்சிபி அணிக்காக 263 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்திலும், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 262 சிக்ஸர்களை அடித்து மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், தீபக் ஹூடா, எம்எஸ் தோனி(w/c), நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், மதீஷா பத்திரனா

இம்பேக்ட் வீரர்கள்: சிவம் துபே, ஆர் அஷ்வின், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேட்ச்), ஜிதேஷ் சர்மா(வ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என்கிடி, யாஷ் தயாள்

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர்கள்: சுயாஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரஷிக் தர் சலாம், மனோஜ் பன்டேஜ், ஸ்வப்நில் சிங்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை