ஐபிஎல் 2021: ஆர்சிபியின் கேப்டனாக விராட் கோலியின் பயணம்!

Updated: Tue, Oct 12 2021 13:33 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

பிளேஆஃப் சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தோற்றதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அந்த அணி வெளியேறியுள்ளது. இதையடுத்து விராட் கோலியின் ஆர்சிபி கேப்டன்ஷிப் பயணமும் முடிவடைந்தது. 

மேலும் இனி ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரை ஆர்சிபி அணியில் தொடர்வேன் என விராட் கோலி உத்தரவாதம் தந்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு யு-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆர்சிபி அணிக்குத் விராட் கோலி தேர்வானார். அதன்பின் 2013ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் முழு நேர கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். 

இதுவரை விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் 140 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி, 66 வெற்றிகளையும், 70 தோல்விகளையும், 4 போட்டிகளில் முடிவுகள் இல்லை என்பதையும் சந்தித்துள்ளது. இதில் ஆர்சிபி அணியின் வெற்றி சதவீதம் 47.17 ஆகும். 

மேலும் ஆர்சிபி அணியின் கேப்டனாக 139 இன்னிங்ஸில் களமிறங்கியுள்ள விராட் கோலி, 5 சதங்கள், 35 அரைசதங்கள் என மொத்தம் 4871 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 41.99 ஆகும். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

விராட் கோலியின் தலைமையில் ஆர்சிபி அணி இதுவரை 4 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. அதிலும் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறி, இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை