ராஜத் படித்தாரைப் பாராட்டிய விராட் கோலி!

Updated: Thu, May 26 2022 14:32 IST
Image Source: Google

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை  14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்தஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ராஜ் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் பட்டிதாருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டிக்குப்பின் பேசிய ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி,“ ஐபிஎல் வரலாற்றிலேயே சர்வதேச போட்டிகளில் களமிறங்காத ஒருவீரர் நாக்அவுட் போட்டியில் சதம் அடிப்பது பட்டிதார் மட்டும்தான். நான் போட்டி முடிந்தபின் பட்டிதாரிடம் அவரின் பேட்டிங் குறித்து வெகுவாகப் பாராட்டினேன். அதில் நான் இதற்குமுன் நெருக்கடியான காலகாட்டத்தில் ஆடப்பட்ட பல இன்னிங்ஸ்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால், இன்று ரஜத் பட்டிதார் ஆடிய சிறந்த இன்னிங்ஸைப் போல் பார்த்தது இல்லை. அதிகமான நெருக்கடி, மிகப்பெரிய போட்டி, சர்வதேச போட்டியில் களமிறங்காத வீரர்  இவற்றைக் கடந்து சாதித்துள்ளார் பட்டிதார்

இந்த ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். இதுபோன்ற சூழலை நான் இதற்கு முன்கடந்திருக்கிறேன்.பட்டிதார் இன்று ஆடிய இன்னிங்ஸ் மிகமிகசிறப்பானது.  இந்த இன்னிங்ஸை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆட்டத்தின் தன்மை, சூழல், ஆகியவற்றைப் புரிந்துகொண்டு பட்டிதார் இன்னிங்ஸை அனைவரும் பாராட்ட வேண்டும்.

கடைசி நேரத்தில் கேஎல் ராகுல், தீபக் ஹூடா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தது போட்டியை நெருக்கமாகக் கொண்டு சென்று எங்களுக்கு சற்று பதற்றமாக இருந்து. ஆனால் ஹசரங்கா எடுத்த ராகுல் விக்கெட் திருப்புமுனையாக இருந்தது. ஹசல்வுட் குர்னல் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தினார்.

சில பதற்றங்கள் கடைசி நேரத்தில்  இருந்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் ஹசரங்கா சிறப்பாக வீசினார். ஹசல்வுட் கடைசி நேரத்தில் அற்புதமாக பந்துவீசினார். ஹர்சல் படேல் பந்துவீச்சு வியப்பாக இருந்தது. நான் கடந்த வந்த பாதையை நினைத்து அனைவரும் மகிழ்கிறோம். சிறந்த அம்சங்கள் என்னவென்றால் நாங்கள் மீண்டும் ஓர் நாக்அவுட்டில் விளையாடப் போகிறோம். நாங்கள் நாளை பயணத்துக்கு தயாராகிறோம், அகமதாபாத்தில் பீல்டிங் செய்ய காத்திருக்க முடியாது. உற்சாகமாக இருக்கிறோம், சிறந்த கிரிக்கெட்டுக்காக காத்திருக்கிறோம். இன்னும் இரு போட்டிகள்தான் கொண்டாட்டத்துக்காக காத்திருக்கிறது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை