ஐசிசி தரவரிசை: டாப் - 10 பாட்டியலை விட்டு வெளியேறிய கோலி!

Updated: Fri, Dec 17 2021 11:46 IST
virat kohli lost his place in t20 top 10 batsman (Image Source: Google)

அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் முடிவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சிறப்பாக விளையாடும் அணிகள், வீரர்கள் என அனைத்தையும் பட்டியலிட்டு தர வரிசைப்படுத்தி வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த பின்னர் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வரலாறு காணாத சறுக்கலை கண்டுள்ளார். எப்பொழுதுமே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் டாப் 10 பட்டியலில் மேலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் விராட்கோலி இம்முறை டாப் 10-லிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் உள்ளனர். மேலும் இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம், மூன்றாவது இடத்தில் பாபர் ஆசாம், நான்கு மற்றும் ஐந்து இடங்களில் ரிஸ்வான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் விராட் கோலி 657 புள்ளிகளுடன் 11ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக 658 புள்ளிகள் பெற்று மார்ட்டின் கப்தில் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ரோகித் சர்மா 13ஆவது இடத்தை பிடித்துள்ளார். 

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டதாலேயே தற்போது டாப் 10-ல் இருந்து வெளியேறி உள்ளார். இருப்பினும் அவர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவார் என நம்பலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை