டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!

Updated: Thu, Apr 10 2025 13:38 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்வதால்,  இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

வார்னரின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பு

அதன்படி இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை சமன்செய்வார். தற்போது டேவிட் வார்னர் 184 இன்னிங்ஸ்களில் விளையாடி 66 அரைசதங்களை விளாசி முதலிடத்தில் உள்ள நிலையில், விராட் கோலி 248 இன்னிங்ஸ்களில் 65 அரைசதங்களை விளாசி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்கள்

  • டேவிட் வார்னர் - 66
  • விராட் கோலி - 65
  • ஷிகர் தவான் - 53
  • ரோஹித் சர்மா - 45
  • ஏபிடி வில்லியர்ஸ் - 43 

ரோஹித் சர்மாவை வீழ்த்த வாய்ப்பு.

இந்தப் போட்டியில் விராட் கோலி மேற்கொண்டு நான்கு சிக்ஸர்கள் அடித்தால், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடிப்பார். இதுவரை விராட் கோலி ஐபிஎல் தொடரில் 278 சிக்ஸர்கள் அடித்துள்ளார், அதே நேரத்தில் ரோஹித் சர்மா 282 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்

  • கிறிஸ் கெயில் - 357 சிக்ஸர்கள்
  • ரோஹித் சர்மா - 282 சிக்ஸர்கள்
  • விராட் கோலி - 278 சிக்ஸர்கள்
  • எம் எஸ் தோனி - 255 சிக்ஸர்கள்
  • ஏபிடி வில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள்

Also Read: Funding To Save Test Cricket

நடப்பு சீசனில் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில், கடந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தி இருந்தார். தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இன்றைய ஆட்டத்திலும் அதனை தொடரும் பட்சத்தில் இந்த சாதனைகளை முறியடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை