பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!

Updated: Sat, Jul 16 2022 21:44 IST
Image Source: Google

கிரிக்கெட் உலகம் முழுவதும் தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தான் பேசுப்பொருளாகியுள்ளது. இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் சொதப்பிய அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக பல்வேறு வீரர்களும் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போட்ட ட்வீட், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் கோலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, "இதுவும் கடந்து போகும், தைரியமாக இருங்கள்" என நம்பிக்கை வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட் குறித்து விளக்கம் அளித்திருந்த பாபர் அசாம், ஒரு கிரிக்கெட் வீரராக ' ஃபார்ம் அவுட்' காலங்கள் குறித்து எனக்கு நன்றாக தெரியும். இதுபோன்ற சமயங்களில் ஒரு வீரருக்கு சப்போர்ட் தேவை. அதற்காக தான் நான் கோலிக்காக ஆறுதல் கூறினேன். அது அவருக்கு நம்பிக்கையை கொடுக்கும் என நினைத்தேன். அவர் உலகின் மிகச்சிறந்த வீரர்கள் ஒருவர், நிச்சயம் கம்பேக் தருவார் எனக் கூறியிருந்தார்.

பாபரின் இந்த பதிவிற்கு 2 நாட்கள் கழித்து விராட் கோலி பதிலளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் " மிகவும் நன்றி.தொடர்ந்து முன்னேற்றத்தை மட்டுமே நீங்கள் காண வேண்டும். சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்” என கோலியும் நட்பு ரீதியாக வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் ரீதியான பிரச்சினைகளால் தனிப்பட்ட தொடர்கள் நடைபெறவில்லை. ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆனால் இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து நிற்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை