SA vs IND: தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!

Updated: Tue, Dec 07 2021 10:59 IST
Virat Kohli to lead; Rohit Sharma, Rishabh set for return: Team India's probable squad for South Afr (Image Source: Google)

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், 4 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் காரணமாக, இந்த தொடர் நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டது. 

இந்நிலையில் இப்போது ஒரு வாரம் தாமதமாக இந்தத் தொடர் தொடங்க இருக்கிறது.  இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 

இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26ஆம் தேதியும், 2ஆவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3ஆ தேதியும், 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11ஆம் தேதியும் தொடங்குகிறது.  

அதேபோல் முதல் இரு ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பார்ல் மைதானத்திலும், கடைசி போட்டி 23 ஆம் தேதி கேப்டவுனிலும் நடைபெறுகிறது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்க இருக்கிறது.தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் துணை கேப்டன் ரஹானே, அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. 

மோசமான ஃபார்ம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே சேர்க்கப்படவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்க தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உத்தேச இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே/ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த், விருத்திமான் சஹா , ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா/இஷாந்த் சர்மா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை