கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய அணியின் கேப்டனாக மூன்றுவித கிரிக்கெட்டிலும் செயல்பட்டுவரும் விராட் கோலி அடிக்கடி ஏற்படும் தோல்விகளால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்ற விமர்சனத்துக்குள்ளாவது நடைமுறை ஆகிவிட்டது. அந்த வகையில் தற்போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வேறு கேப்டன் நியமிக்கலாம் என்ற செய்திகள் பரவலாக அதிகரித்து வருகின்றன.
மேலும் விராட் கோலியை விட மற்ற வீரர்கள் தற்போது வளர்ந்து வருவதால் நிச்சயம் கோலி ஏதாவது ஒரு கிரிக்கெட் வடிவத்திலிருந்து கேப்டன் பதவியை இழக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் தனது பதவியை விராட் கோலி ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விராட் கோலி, டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின் டி20 கிரிக்கெட்டின் கேப்டன்ஷிப்பில் இருந்து இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுகுறித்து அவர் கூறுகையில், “டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை நான் பிசிசிஐ பொருளாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன். மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படும் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் மட்டும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டி20 அணிக்கு மட்டும் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பு ஏற்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.