ஆசிய கோப்பை தொடருக்காக ஸ்பெஷல் பேட்டை பயன்படுத்தவுள்ள விராட் கோலி!

Updated: Wed, Aug 24 2022 19:45 IST
Virat Kohli To Use a special bat in the Asia Cup! (Image Source: Google)

நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக அமீரகம் சென்றடைந்துள்ள இந்திய அணி இன்று முதல் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.

இந்த ஆசிய கோப்பை தொடர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதனை விட விராட் கோலிக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு சதம் கூட அடிக்காமல் 1,000 நாட்களை கடந்துவிட்ட விராட் கோலி நீண்ட ஓய்வுக்கு பிறகு நேரடியாக ஆசிய கோப்பையில் பங்கேற்கிறார். இதில் சிறப்பாக விளையாடினால் தான் கோலிக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும்.

விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்முக்கு அவரின் பேட் தான் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. ட்ரைவ் ஷாட்கள் விளையாடும் போது, அவருக்கு ஏற்றவாறு பேட்டின் தன்மை இல்லாமல் இருப்பதால், அடிக்கடி அவுட்டாகிவிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தற்போத் தீர்வு காணப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடர் முதல் விராட் கோலி "ஸ்பெஷல் கோல்ட் விசார்ட் குவாலிட்டி பேட்டை" தான் பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக விலைமதிப்புடைய இந்த பேட், இங்கிலாந்தின் வில்லோ என்ற மரத்தின் மூலம் செய்யப்படுகிறது. இந்தவகை பேட்டை பிரபல டையர் நிறுவனமான எம்.ஆர்.எஃப். ஸ்பான்சர் செய்யவுள்ளது.

விராட் கோலி பயன்படுத்த போகும் இந்த பேட்டின் மூலம் இனி ட்ரைவ் ஷாட்கள் சுலபமாக விளையாடலாம் எனத்தெரிகிறது. இந்த பேட்டின் விலைமதிப்பு சுமார் ரூ.22,000 ஆகும். விராட் கோலி இந்த பேட்டில் ஜொலித்துவிட்டால், இந்திய அணியில் மேலும் சில வீரர்களும் இதே பேட்டை பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை