ஆஸ்வினை தேர்வு செய்வதில் விராட் உறுதியுடன் இருந்தார் - சவுரவ் கங்குலி!

Updated: Wed, Dec 15 2021 11:56 IST
Image Source: Google

விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணி அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கலந்துகொண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்று போட்டிகளிலேயே வெளியேறியது. இந்த தொடருக்கான அணித்தேர்வின் போது ஒயிட் பால் கிரிக்கெட்டில் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

அதிலும் குறிப்பாக அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை தாண்டி அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் அதிகளவு பேசப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு திரும்பிய அஷ்வின் மூன்று போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அவரது பந்து வீச்சு இந்த டி20 தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ-யின் தலைவரான சவுரவ் கங்குலி, விராட் கோலி அஸ்வினுக்கு இந்த டி20 உலகக்கோப்பை தொடரின்போது எவ்வாறு ஆதரவு அளித்தார் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான்கூட அஷ்வின் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மீண்டு வருவார் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் அஸ்வின் அணியில் இருக்க வேண்டும் என்று கோலி முனைப்புடன் இருந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். அஸ்வினும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்றும் கூறினார்.

அஸ்வின் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர். ஆனால் அவர் குறித்து புரிந்துகொள்ள ராக்கெட் சயின்ஸ் எல்லாம் தேவையில்லை அவர் ஒரு அற்புதமான பிளேயர். கான்பூர் டெஸ்ட் போட்டியின் முடிவில் கூட பயிற்சியாளர் டிராவிட் அவரை ஆல் டைம் கிரேட் என்று கூறியிருந்தார். நிச்சயம் அந்த அளவிற்கு அஷ்வின் ஒரு சிறப்பான வீரர்தான்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை