ஐபிஎல் 2022: விராட் கோலி கேப்டனாக செயல்பட வாய்ப்பில்லை - டேனியல் வெட்டோரி!

Updated: Mon, Mar 07 2022 21:42 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததுமே, ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. 2013ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட்கோலி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்லவில்லை. அதுவே அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி பெரிய ஸ்கோர் எதுவும் செய்யாத நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சி, ஆர்சிபி கேப்டன்சி என அவர் வகித்த அனைத்து கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.

ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து ஆர்சிபி அணியில் விராட் கோலி ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார். எனவே இந்த சீசனில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணி, ஏலத்தில் டுப்ளெசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய கேப்டன்சிக்கான வீரர்களை எடுத்தது. ஆனால் இவர்களை விட, ஆர்சிபி அணி ஏலத்திற்கு முன் தக்கவைத்த கிளென் மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமிப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது.

தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. மேக்ஸ்வெல் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, விராட்கோலியையே மீண்டும் கேப்டன்சியை ஏற்குமாறு ஆர்சிபி அணி நிர்வாகம் பேசியதாகவும் தகவல் வெளியாகியது.

ஆனால், விராட் கோலி இனிமேல் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பேயில்லை என்று முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டேனியல் வெட்டோரி, “விராட் கோலி இனிமேல் ஆர்சிபி அணிக்கு கேப்டன்சி செய்ய வாய்ப்பே இல்லை. சர்வதேச கிரிக்கெட்டோ அல்லது ஐபிஎல்லோ, கேப்டன்சியிலிருந்து விலகிய ஒரு வீரர் மீண்டும் கேப்டன்சியை ஏற்காமல் இருப்பதே நல்லது. எனவே மேக்ஸ்வெல் - டுப்ளெசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். தினேஷ் கார்த்திக்கிற்கு கூட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை