நடப்பு ஐபிஎல் சீசனின் 33ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வீரர்களில் பிரதான வீரராக ஜொலிக்கிறார் தோனி. 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் சந்தித்த கடைசி 4 பந்துகளில் மட்டும் 16 ரன்களை எடுத்து அசத்தினார். அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

அதில் ஒருவராக இணைந்துள்ளார் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே கேப்டனாக தோனி செயல்பட்ட காலத்தில் அவரது படைத் தளபதியாக விளங்கியவர் ரெய்னா.

Advertisement

இந்நிலையில் தோனி குறித்து பேசிய ரெய்னா "மும்பை மற்றும் சென்னை அணி விளையாடிய இந்தப் போட்டி நடப்பு தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று. அணிக்கு தேவையான இன்னிங்ஸை விளையாடியுள்ளார் நமது தோனி பாய். எப்போதும் உங்களது ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடி இருந்தீர்கள். மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள சிஎஸ்கே-வுக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

நடப்பு சீசனில் மெகா ஏலத்திற்கு முன்னதாக 12 கோடி ரூபாய்க்கு தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது சிஎஸ்கே. இதுவரை இந்த 7 ஆட்டத்தில் விளையாடியுள்ள தோனி 120 ரன்களை சேர்த்துள்ளார். நான்கு முறை நாட்-அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியன் திரும்பியுள்ளார் தோனி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News