இன்சமாம் ஆசியாவின் மிக சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் - விரேந்திர சேவாக்!

Updated: Sat, Jun 03 2023 23:12 IST
Image Source: Google

கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற பேட்ஸ்மென்களின் வரிசையில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் இம்சமாமுல் ஹக் 1991 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 2007 வரை பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தார்.

இதுவரை 430 முதல் தர போட்டிகளில் விளையாடிய இன்சமாம் உல் ஹக்., 13746 ரன்கள் குவித்துள்ளார்.மேலும் சர்வதேச அளவில் 120 டெஸ்ட் போட்டிகள் பங்கேற்று 8830 ரன்கள் அடித்துள்ளார் அதில் 46 அரை சதமும், 25 சதமும் அடங்கும். மேலும் 378 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இசமாம் 11739 ரன்கள் அடித்துள்ளார், அதில் 83 அரை சதமும் 10 சாதகங்களும் அடங்கும். இவர் விளையாடிய காலகட்டத்தில் இவருக்கு அஞ்சாத பந்து வீச்சாளர்கள் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பேட்டிங்கில் தனக்கான ஒரு தனி அங்கீகாரத்தை படைத்துள்ளார்.

இப்படி பேட்டிங்கில் மிகப்பெரிய சாதனை படைத்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் இன்சமாமுல் ஹக்கை, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களை பேசுவது போல் யாருமே மேற்கோள் காட்டி பேசுவது கிடையாது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான விரேந்தர் சேவாக்., இன்சாமல் போன்ற ஒரு பேட்ஸ்மேனை நான் இதுவரை கண்டதில்லை என்று செய்தியாளர்களின் சந்திப்பில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இன்சமாம் உல் ஹக் குறித்து சேவாக் தெரிவிக்கையில், “இன்சமாம் உல் ஹக் மிக சிறந்தவர், அனைவருமே சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசுகிறார்கள்,சச்சின் மிக சிறந்த வீரர். அவர் நாம் அனைவரையும் விட மிக சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் இன்சமாம் ஆசியாவின் மிக சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என நான் நம்புகிறேன்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இன்சமாம் போன்ற ஒரு பேட்ஸ்மேனை நான் பார்த்தது கிடையாது. 2003 காலகட்டத்தில் 10 ஓவர்களில் 80 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அனைத்து அணிகளும் அஞ்சும்,ஆனால் இன்சமாம் ஒருநாளும் பயந்தது கிடையாது. அவர் ஓவருக்கு 8 ரன்கள் அடித்து அசத்துவார் என இன்சமாம் உல் ஹக்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை