தயவுசெய்து ஐபிஎல் க்கு விளையாட வர வேண்டாம் - வார்னருக்கு எச்சரிக்கை கொடுத்த சேவாக்!

Updated: Sun, Apr 09 2023 15:32 IST
Virender Sehwag Slams DC Skipper David Warner With Brutal "Don't Play In IPL" Remark! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதனால் டெல்லிய அணி மூன்றாவது தொடர் தோல்வியை சந்தித்தது . முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 199 ரன்களை எடுத்தது. 

இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது . முதல் ஓவரிலேயே பிரித்விஷா மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்ரெண்ட் போல்ட் . அதன் பிறகு டெல்லி அணியால் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியவில்லை.

அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் பொறுமையாக விளையாடி 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . வார்னரின் இந்த ஆட்டம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது . இதுகுறித்து பேசி இருக்கும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரருமான விரேந்தர் சேவாக் வார்னரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கிரிக்பஸ் இணையதள நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாம் ஆங்கிலத்தில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது அப்போதுதான் நாம் பேசுவது டேவிட் வாரணருக்கு புரியும். நீங்கள் இதைக் கவனித்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து நன்றாக விளையாடுங்கள் . நீங்கள் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும். ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் எவ்வாறு அதிரடியாக ஆட வேண்டும் என்று . 

அப்படி முடியவில்லை என்றால் தயவுசெய்து ஐபிஎல் க்கு விளையாட வர வேண்டாம். டேவிட் வார்னர் 30 ரன்கள் ஆட்டம் இழப்பது டெல்லி அணிக்கு நல்ல விஷயமே. அவர் 50 அல்லது 60 ரன்கள் எடுக்கும் போது பின் வரிசையில் வரும் அதிரடி ஆட்டக்காரர்களான ரோமன் பாவல் மற்றும் அபிஷேக் போரல் போன்ற வீரர்களுக்கு ஆடுவதற்கு போதுமான வாய்ப்பும் நேரமும் கிடைப்பதில்லை. அவர்களைப் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அதிக பந்துகளில் ஆட வேண்டும் என்று எனது பேட்டியை முடித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை