இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனையாக பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றது. ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றிகளில் இந்த வெற்றி முதல் இடத்தை பெற்றுள்ளது.

Advertisement

இந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கே எல் ராகுல் 111*, குல்தீப் யாதவ் 5 விக்கெட்கள் என பல வீரர்களும் முக்கிய காரணம். மேலும், இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சை சந்திக்கவே முடியாது என்ற விமர்சனம் இருந்தது. அதை உடைக்க வேண்டும் என்ற முடிவில் திட்டம் போட்டு அந்த வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சையே ஒரு புரட்டி எடுத்து விட்டது இந்திய அணி.

Advertisement

ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58 அதிரடியாக விளையாடிய 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு நல்ல துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கே எல் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 356 ரன்கள் குவித்தது.

அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங்கிலும் தடுமாறியது. அந்த அணியின் 5 விக்கெட்களை அள்ளினார் குல்தீப் யாதவ். இதை அடுத்து இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதை அடுத்து இந்திய அணி வீரர்கள் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு திரும்பிய போது அங்கே மேள தாளத்துடன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

A memorable victory followed by a much-deserved recovery session ahead of today's Super 4s encounter

Here's a quick round-up of #TeamIndia's remarkable win over Pakistan in Colombo #AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/h0n4yeIZbN

— BCCI (@BCCI) September 12, 2023

அதன்பின் இந்திய வீரர்கள் இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர் இரவு நேரத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டனர். அதிலும் விராட் கோலியும், கேப்டன் ரோஹித் சர்மாவும் நடனமாடி கொண்டாடினர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நீச்சல் குளத்தில் நடனமாடிய காணொளி இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News