இந்த வீரர் டிராவிட்டை கவர்ந்து விட்டார் - விவிஎஸ் லக்ஷ்மண்!

Updated: Sun, Nov 28 2021 16:03 IST
Image Source: Google

இந்திய அணயின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட், பரத்தின் விக்கெட் கீப்பங் திறமை குறித்து சிலாகித்து பேசியதாக லக்ஷ்மண் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் சாஹாவுக்கு அடுத்து விக்கெட் கீப்பிங்கில் திறமை படைத்தவர் பரத் என டிராவிட் கூறியதாக லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர், "பரத்தின் விக்கெட் கீப்பிங் திறமையை ராகுல் டிராவிட் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் விருத்திமான் சாஹாவுக்கு அடுத்தபடியாக பாரதத்திற்கு நல்ல கீப்பிங் திறமை இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்றார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், சிறப்பான கேட்ச்கள் மற்றும் புத்திசாலித்தனமான ஸ்டம்பிங் மூலம் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்திருந்தார் பரத். அதேபோல், சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த டாம் லாதம், யங் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை ரஹானேவை வற்புறுத்தி டிஆர்எஸ் எடுக்க வைத்த முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்தியா போன்ற நாடுகளில் சூழல்கள் மற்றும் பிட்ச்கள் எந்தளுக்கு முக்கியத்துவம் பெறுகிறது, அப்போது ஒரு நல்ல விக்கெட் கீப்பர் எந்தளவுக்கு முக்கியம் என்பதை லக்ஷ்மண் சுட்டிகாட்டினார். யோசிக்கும் திறமை மற்றும் கீப்பிங் நுட்பம் ஆகிய இரண்டின் காரணமாகவே பரத் தன்னை வியக்கவைப்பதாகவும் லக்ஷ்மண் கூறினார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற இந்த சுழல்களில், உங்களிடம் நம்பகமான விக்கெட் கீப்பர் இல்லையென்றால், நீங்கள் நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடும். இன்று நாம் பரத்திடம் பார்த்தது சிறந்த நுட்பம் மற்றும் யோசிக்கும் திறன். சமீபத்தில் அணியில் இணைந்த அவர் எதற்கும் சிறிதும் பயப்படவில்லை. சாஹா காயமடைந்ததால் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது" என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை