மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

Updated: Mon, Oct 10 2022 17:53 IST
Image Source: Google

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. பாகிஸ்தானிடம் மட்டும் ஒரேயொரு தோல்வியை அடைந்த இந்திய அணி மற்ற அனைத்து  போட்டிகளிலும் வெற்றியை ஈட்டியது.

இந்நிலையில் சில்ஹெட்டில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி தாய்லாந்தை எதிர்கொண்டு விளையாடி, அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து அணியில் ஒரேயொரு வீராங்கனை மட்டுமே இரட்டை இலக்கத்தையே எட்டினார். அவரும் 12 ரன் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கம் அல்லது ரன்னே அடிக்காமல் என மளமளவென ஆட்டமிழக்க, 15.1 ஓவரில் வெறும் 37 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தாய்லாந்து அணி.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த மிகக்குறைவான ஸ்கோர் இதுதான். தாய்லாந்தை குறைவான ஸ்கோருக்கு சுருட்டி இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதன்பின் 38 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மேகனா - பூஜா வஸ்த்ரேகர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6வது ஓவரிலேயே அடித்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை