ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான  பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குசால் மெண்டிஸ் 13 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

மற்றொரு தொடக்க வீரர் பதும் நிஷங்காவும் 23 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமா 13 ரன்களுக்கும், அசலங்கா 6 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 26 ரன்களுக்கும், துஷன் ஷன்கா 23 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியானது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ஆண்ட்ரூ பால்பிர்னி 16 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் 21 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலிய திரும்பினர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோர்கன் டக்கர் 11 ரன்களிலும், ஹாரி டெக்டர் 13 ரன்களிலும், ஜார்ஜ் டெக்ரேல் 17 ரன்களிலும், கரெத் டெலானி 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதனைத்தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கர்டின் காம்பெரும் 26 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அயர்லாந்து அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் தசுன் ஷனகா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணியானது 41 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News