பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்ப் உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. மொத்தம் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் அணி, அனைத்து போட்டிகளிலும் பீல்டிங்கில் மோசமாக சொதப்பி இருந்தது. 

Advertisement

இதை அடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி தேர்வு செய்யவில்லை என்ற உண்மை வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்து இருந்தது பாகிஸ்தான் அணி. ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 283 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. ஆனால், அதைவிட பீல்டிங் மோசமாக இருந்தது. 

Advertisement

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதியை பற்றிய உண்மையையும், அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு கிலோ ஆட்டுக் கறி உண்கிறார்கள் என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் வாசிம் அக்ரம். இதுகுறித்து பேசிய அவர், “இன்று மிகப் பெரிய அவமானம் நடந்தது. 280 ரன்கள் இலக்கை வெறும் 2 விக்கெட் மட்டும் இழந்து எட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். பிட்ச்சை குறை கூறுவதை விட பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங்கை பாருங்கள். அவர்களின் உடற்தகுதியை பாருங்கள். 

இந்த வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி சோதனையிலேயே பங்கேற்கவில்லை. நாங்கள் மூன்று வாரங்களாக கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறோம். நான் தனித்தனியாக வீரர்களின் பெயர்களை கூறினால் அவர்கள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை வரும். இந்த வீரர்கள் தினமும் எட்டு கிலோ ஆட்டுக் கறி உண்கிறார்கள் போல தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தக் கூடாதா?” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அரையிறுதிச் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News