Afghanistan vs pakistan
AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஆகஸ்ட் 22ஆம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ளது.